நிலவும் எல்-நினோ நிலைமை காரணமாக அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியிலும் ஏப்ரல் மாத முதல் இரண்டு வாரங்களிலும் மின்சார உற்பத்தியில் தாக்கம் ஏற்படக்கூடும் என வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை எதிர்கொள்ள மின்கல சக்தி சேமிப்பு அமைப்பின் மூலம் அதிகளவு மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி இந்த திட்டத்தின் முதற்கட்டமாக டிசம்பர் மாதத்திற்கு முன்னர் 160 மெகாவோட் மின்சாரத்தை மின்கட்டமைப்பில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் 130 மெகாவோட் மின்சாரமும் அக்டோபர் மாதத்தில் 10 மெகாவோட் மின்சாரமும் பெற்றுக்கொள்ளப்பட உள்ளன.
அத்துடன் தனியார் துறையினரால் நிர்மாணிக்கப்பட்டு வரும் மன்னார் காற்றாலை மின்நிலையம் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்பட்டால் மேலும் 50 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் இணைக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எல்-நினோ நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் மின்கல அமைப்பின் மூலம் 250 மெகாவோட் மற்றும் 150 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் சேர்க எதிர்பார்பதாகவும் அமைச்சர் அநுர கருணாதிலக்க மேலும் தெரிவித்தார்.
