திருகோணமலை வரோதயநகர் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல்

 திருகோணமலை வரோதயநகர் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் குடும்பத்தினரால் வரோதயநகர் பிரதான வீதியின் படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற வீடுகளுக்கு அருகே இடம்பெற்றது.

இதன்போது 17.08.1985 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 11 பேர் உள்ளிட்ட அதனை அண்மித்த காலங்களில் குறித்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களையும் நினைவுகூர்ந்து அவர்களின் ஆத்தசாந்தி வேண்டி மலர்தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த படுகொலைச் சம்பவத்தில் குணராசா வசிகலா, குணராசா சங்கர், குணராசா கெங்கா, தேசிங்கன் இன்பன், தேசிங்கன் ஜெயந்தி, இராசரெட்ணம் ரபேந்திரராசா, கதிர்காமு நாகேஸ்வரி, வெள்ளையன் திருச்செல்வம், கந்தன் மாணிக்கம், சீனியன் மாணிக்கம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டிருந்த கதிர்காமு என்பவருடைய எட்டுவயதான மகள் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து காணாமல் போயிருந்தார்.






Post a Comment