Posts

மக்களை எத்தனை காலம் தான் ஏமாற்றுவீர்கள்? கொந்தளித்த நாமல்


இலங்கையின் டிஜிட்டல் அடையாள அட்டைக்கான காலக்கெடு ஏற்கனவே முடிந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்த திட்டம் உண்மையில் எப்போது மக்களுக்கு வழங்கப்படும் என்பதை அரசாங்கம் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் அடுத்தடுத்து பல காலக்கெடு அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாக அவர் சாடியுள்ளார்

அத்துடன் "ஏப்ரல் 2026 இலக்காக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த காலக்கெடு இப்போது முடிந்துவிட்டது. இந்த ஆண்டின் இறுதிக்குள் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும் என்று மீண்டும் கூறப்பட்டு வருகிறது. மக்கள் இன்னும் எத்தனை காலக்கெடுகளைக் கடந்து காத்திருக்க வேண்டும்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "டிஜிட்டல் மாற்றம் என்பது வெறும் அறிவிப்புகளுக்கு அப்பாற்பட்டது. அதில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவைக் காப்பாற்றுதல் ஆகியவை அவசியம். எனவே, டிஜிட்டல் அடையாள அட்டை எப்போது வழங்கப்படும் என்பதை அரசு மக்களுக்குத் தெளிவாகக் கூற வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment