WhatsApp கணக்குகளை திருடும் ஹெக்கர்கள்
Apple கையடக்க தொலைபேசியிலுள்ள WhatsApp கணக்குகளை கைப்பற்றும் புதிய சைபர் தாக்குதல் தொடர்பில் இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
Zero-Click என அழைக்கப்படும் இந்த செயற்பாடு iOS 16 பதிப்பை சேர்ந்த ஐபோன்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படுவதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சைபர் தாக்குதலுக்கு உள்ளான பலர் தற்போது அது தொடர்பில் முறைப்பாடுகளை அளித்துள்ளதாகவும் இதற்கமைய Zero-Click பாதுகாப்பு மீறல் நாட்டில் இடம்பெற்று வருவதாகவும் இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.
இத்தாலியை சேர்ந்த பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வுக்கு அமைய WhatsApp Linked Device Synchronization (ஸின்க்ரோனைசேஷன்) செயன்முறையில் தாக்கம் செலுத்தும் பல பாதுகாப்பு பலவீனங்களை ஒன்றிணைத்து பயன்படுத்தி ஹேக்கர்களினால் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்படுகின்றது என சந்தேகிக்கப்படுவதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
