இலங்கை மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு

 புற்றுநோய் சிகிச்சையின் போது நோயாளிகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் வெள்ளை அணுக்களின் அளவை உயர்த்தவும் உதவும் அவசியமான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், புற்றுநோய் நோயாளிகள் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேரி, நேரிழபநnஇ புஊயனகு மற்றும் குடைபசயளவiஅ உள்ளிட்ட மருந்துகள் தட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அவற்றை நம்பியிருக்கும் நோயாளிகள் கடுமையான சுகாதார அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புற்றுநோய் சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நோயாளிகளுக்கு வெள்ளை அணுக்களின் உற்பத்தியைத் தூண்டுவதற்கும், நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் உடலின் திறனை வலுப்படுத்துவதற்கும் பு-ஊளுகு மருந்துகள் வழங்கப்படுகின்றன.

'இந்த மருந்துகள் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை நேரடியாகப் பாதிக்கின்றன, மேலும் சிகிச்சையின் போது புற்றுநோய் நோயாளிகளை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்க இவை அத்தியாவசியமானவையாகும்.

இறக்குமதிச் செயல்பாட்டின் போது ஏற்பட்ட சிக்கல் காரணமாக மருத்துவப் பொருட்கள் பிரிவு இந்த மருந்துக்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அத்தியாவசியமான மற்றும் உயிர் காக்கும் புற்றுநோய் மருந்துகளின் தடையற்ற விநியோகம் உறுதி செய்யப்படவில்லை என்பதும் சுகாதார அமைச்சுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் தனியார் துறையிலும் இந்தத் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறிய மருத்துவர்கள், சிகிச்சையின் ஒரு பகுதியாக இந்த மருந்துகள் தேவைப்படும் புற்றுநோய் நோயாளிகளுக்கு இது தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment