ஜோதிடத்தில் சூரியனும் சனியும் தந்தை மகன் என்று சொல்லப்பட்டாலும், இவர்களுக்கு இடையிலான உறவு மோதல் நிறைந்தது. ஷடாஷ்டக யோகம் பொதுவாக தடைகள், நிதி நெருக்கடி, மன அழுத்தம் மற்றும் நடக்கும் வேலைகளில் இடையூறுகளை தருவதாக கருதப்படுகிறது.
இந்த கிரக அமைப்பு எல்லா ராசிக்கும் தாக்கத்தை தந்தாலும், சில ராசிகள் அதிக சவால்களை சந்திக்க போகிறார்கள்.
*மகரம்*
மகர ராசிக்கு அதிபதி சனி பகவான். அதனால் இந்த கிரக அமைப்பு மகர ராசிக்காரர்களுக்கு மிக முக்கியமானது. இந்த நேரத்தில் வேலையில் முழு கவனம் செலுத்துங்கள். தேவையில்லாத பண விஷயங்களில் முடிவெடுப்பதை தவிருங்கள். முக்கிய பரிவர்த்தனைகள் செய்யும் போது கவனமாக இருங்கள். அதிக ரிஸ்க் உள்ள முதலீடுகளை இப்போது தள்ளி வைப்பது நல்லது.
*கும்பம்*
கும்ப ராசிக்கும் அதிபதி சனி பகவான். சூரியன் மற்றும் சனியின் சேர்கையால் கும்ப ராசிக்காரர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம் இது. வேலையில் கருத்து வேறுபாடுகள், எதிர்பாராத செலவுகள், நிதி நெருக்கடி வர வாய்ப்புள்ளது. அவசரமாக முதலீடு செய்ய வேண்டாம். பிறருக்கு கடன் கொடுப்பதிலும் கவனம் தேவை. வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியே இருக்க நேரிடலாம். அதனால் குடும்பத்தில் சிறு அழுத்தம் உருவாகலாம்.
---
உங்க ராசிக்கு வரும் வார பலன் பார்கவா அக்கா
