மாத்தளை மாவட்டத்தில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் பெண் அதிபர் தனது மகளை சேர்பதற்காக வந்த அரச ஊழியர் ஒருவரிடம் பாலியல் லஞ்சம் கோரியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் மாத்தளையில் உள்ள அரச நிறுவனம் ஒன்றுக்கு இடமாற்றம் பெற்று வந்த அந்த அரச ஊழியர், தனது மகளை பாடசாலையில் சேர்பதற்கான ஏற்பாடுகளுக்காக அதிபரை சந்தித்துள்ளார்.
அந்த சந்திப்பின் போதே அதிபர் தன்னிடம் பாலியல் லஞ்சம் கோரியதாக தந்தை தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.
