யாழில் அதிர்ச்சி! வீடு புகுந்த இளைஞன் – கத்தி முனையில் பெண்ணிடம் அத்துமீற முயற்சி


யாழ்ப்பாணத்தில் இரவு நேரத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து, கத்தி முனையில் பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், பிறவுண் வீதியில் உள்ள தனது வீட்டுக்குள் கடந்த 14ஆம் திகதி இரவு இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைந்து, கத்தியை காண்பித்து தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றதாக பெண்ணொருவர் மறுநாள் 15ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இளைஞர் ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின்போது, கடந்த 14ஆம் திகதி பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது தானே என சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, குறித்த இளைஞர் வேறு ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Post a Comment