தெமட்டகொட, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு - வடக்கு பிராந்திய குற்றப்பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட வேளையில், அவரிடமிருந்த போதைப்பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் கடந்த மாதம் 23 ஆம் திகதியன்று இடம்பெற்றதுடன், இதில் நபர் ஒருவர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
