வங்கி அதிகாரி போல நடித்து மோசடி இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை

 

வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல நடித்து இணையவழி மூலம் பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழு தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரித்துள்ளது.

மோசடி செய்யும் முறை

1.  பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் என கூறி தொலைபேசியில் அழைப்பு

2.  பிரபல வங்கிகளின் பெயரில் போலி குறுஞ்செய்திகளை அனுப்புதல்

3.  வங்கி கணக்கில் பணம் மோசடியாக வந்துள்ளது என கூறி அச்சுறுத்துதல்

4.  மத்திய வங்கியின் போலி கடித தலைப்பு, கையொப்பம், உத்தியோகபூர்வ முத்திரை உள்ள ஆவணங்களை அனுப்புதல்

5.  பொலிஸ் சீருடை, வங்கி அடையாள அட்டை, போலி முத்திரைகளை பயன்படுத்துதல்

இவர்கள் முதியோர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை குறிவைப்பதாகவும் தெரியவந்துள்ளது.

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள்

- பொலிஸ் அல்லது வங்கி அதிகாரி என கூறுபவர்களிடம் OTP, கடவுச்சொல், கணக்கு இலக்கம் போன்ற தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம்

- சந்தேகத்திற்குரிய அழைப்புகள் வந்தால் உடனடியாக பொலிஸ் நிலையம் அல்லது உங்கள் வங்கியை அதிகாரபூர்வ தொலைபேசி இலக்கம் ஊடாக நேரடியாக தொடர்பு கொள்ளவும்

குறுஞ்செய்தி மற்றும் இணையவழி மூலம் வரும் நிதி தொடர்பான செய்திகளில் கவனமாக இருக்கவும்

மோசடியில் சிக்கியதாக சந்தேகம் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் கணினி அவசர பதிலளிப்பு குழு கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment