திருகோணமலை வைத்தியசாலையில் 3.1 கிலோ எடையுள்ள மிகப்பெரிய சிறுநீரக கல் அகற்றம்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிகப்பெரிய சிறுநீரக கல்லை சத்திர சிகிச்சை மூலம் வைத்தியர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.

நேற்று 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த சத்திர சிகிச்சையில் 3 கிலோ 100 கிராம் எடையுள்ள சிறுநீரக கல் அகற்றப்பட்டுள்ளது.

திருகோணமலை பகுதியை சேர்ந்த அந்த நபருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சத்திர சிகிச்சையில் டாக்டர் எம் எம் ரிஷ்லி, டாக்டர் ஜே எம் இஹ்ஸான், டாக்டர் சீ பிரகலாதன் மற்றும் மயக்க மருந்து வைத்திய நிபுணர் டாக்டர் அமில ஜெயக்கடு ஆகியோரும் இணைந்து செயற்பட்டனர்.

இதுவரை உலக சுகாதார திணைக்கள அறிக்கைகளின் படி 2003ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் 1.9 கிலோ எடையுள்ள சிறுநீரக கல் அகற்றப்பட்டதே பதிவாகியிருந்தது. 


ஆனால் திருகோணமலையில் அகற்றப்பட்ட 3.1 கிலோ எடையுள்ள கல் அதை விட பல மடங்கு பெரியதாகும். இதன் மூலம் உலக சாதனையை திருகோணமலை வைத்திய குழுவினர் படைத்துள்ளனர்.

Post a Comment