யாழ்பாணத்தை சேர்ந்த பிரபல யூடியூப்பர் ஒருவரின் காதலி மற்றும் அவரது வீடியோ எடிட்டர் தொடர்பில் ஏற்பட்ட சர்சை சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
அந்த யூடியூப்பர் தனது சேனலுக்கான எடிட்டிங் வேலைகளுக்காக பாடசாலை கால நண்பர் ஒருவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். குறித்த நபர் கொக்குவில் பகுதியில் போட்டோ ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வந்ததாகவும், அங்கு வைத்து தான் எடிட்டிங் பணிகள் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் யூடியூப்பரின் காதலி அந்த இடத்துக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கும் எடிட்டருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் இந்த விடயம் யூடியூப்பருக்கு தெரிய வந்ததாகவும் பதிவில் கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து யூடியூப்பர் காதலி மற்றும் எடிட்டர் இருவருடனும் உறவை முறித்துக்கொண்டதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
