பேருவளையிலிருந்து காலி வழியாக மாத்தறை வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்றும், கரையோரப் பகுதிகளுக்குள் கடல் நீர் புகும் அபாயம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் அலைகளின் உயரமானது 2.0 முதல் 3.0 மீட்டர் வரை உயரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறிப்பிடப்பட்டுள்ள கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படையினர், மீனவர்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புடன் செயல்படுமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
.jpeg)