வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த ஐவர், நேற்று (19) இரவு சுமார் 11 மணியளவில் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனினும், அப்பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரவு நேரப் பயணம் பாதுகாப்பற்றது எனத் தெரிவித்த பொலிஸார், மறுநாள் காலை பயணிக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, தங்குவதற்கு இடமொன்றைத் தேடி அவர்கள் மீண்டும் காரில் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், நள்ளிரவு சுமார் 12 மணியளவில் மோகினி நீர்வீழ்ச்சி பகுதியில் வைத்து, சீரற்ற காலநிலை மற்றும் வழுக்கும் வீதி காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது காரில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் பயணித்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக, அவர்களில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. எனினும், கார் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)