நவகிரகங்களில் புதன் கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படுகிறார். புதனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகும். தற்போது கடக ராசியில் இருக்கும் புதன் ஆகஸ்ட் 22 ஆம் திகதி சிம்ம ராசிக்குள் நுழையப்போகிறார்.
கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்குள் புதன் நுழைவது மிகவும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது.இந்த கிரக மாற்றத்தால் இழப்புகளையும், பின்னடைவுகளையும் சந்திக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த கிரகப் பெயர்ச்சியால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள். இந்த கிரக மாற்றத்தால் அவர்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக அதிகரிக்கும். மேலும், அவர்கள் வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் அவர்களின் கவலையை அதிகரிக்கும். எதிரிகளின் வலிமை அதிகரிப்பதால் இந்த காலகட்டம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்கும் மற்றும் வேலையில் பாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றம் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. இந்த கிரக மாற்றத்தால் பெரும்பாலும் வாழ்க்கையில் மோசமான அனுபவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு முடிவை எடுப்பதற்கு முன் நிறைய சிந்திக்க வேண்டும். பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கிய விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த ராசி மாற்றம் சாதகமான விளைவுகளை அளிக்கப்போவதில்லை. இந்த கிரக மாற்றத்தால் அவர்கள் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் இருக்கும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், மேலும் வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட கடந்த கால பிரச்சினைகள் மீண்டும் துளிர்விடும். இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிக பொறுமையை கடைபிடிக்க வேண்டும், மேலும் பல்வேறு விஷயங்களை தெளிவுடன் கையாள வேண்டும்.
