மன்னார் மடு மாதா அன்னை திருத்தலத்தின் வருடாந்திர திருவிழா இன்று நடைபெறுகிறது.
புனித கன்னி மரியாவின் வான்நோக்கிய உயர்வுப் பெருவிழாவை மையமாகக் கொண்டு, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இது வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் ஒரு அடையாளமாகக் கருதப்படுகின்றது.
இந்த ஆண்டிற்கான ஆண்டுப் பெருவிழாவின் திருத்திருப்பலி இன்று காலை 6:00 மணிக்குத் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் ஏராளமான பக்தர்கள் இந்த ஆன்மீகக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர்.
