அனுராதபுரம் - பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் வங்கி முகாமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் எப்பதொல பகுதியில் உள்ள அரச வங்கி முகாமையாளர் ரொஹான் ஜயந்த பண்டார, வயது 43. அனுராதபுரத்தை சேர்ந்த இவர் திருமணமாகாதவர் ஆவார்.
அனுராதபுரத்தில் இருந்து எப்பதொல நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல வலது பக்கமாக சென்றபோது, அனுராதபுரம் நோக்கி வந்த தனியார் பேருந்துடன் மோதியுள்ளது.
காயமடைந்த முகாமையாளர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி அனுராதபுரம் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
