நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: 2,723 நிலையங்களில் 2.94 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 294,089 பரீட்சார்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்களுக்கான தடை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. 

பரீட்சை நிறைவடையும் வரை இந்த தடை தொடரும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.



Post a Comment