2026 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நேற்று 07.08.2026 வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
கல்வி அமைச்சு விடுத்த அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் 3ஆம் தவணை முதலாம் கட்டம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் கட்டம் செப்டம்பர் 2ஆம் திகதி நிறைவடையும்.
அனைத்து பாடசாலைகளுக்கும் 3ஆம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டம்பர் 7ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி டிசம்பர் 4ஆம் திகதியுடன் நிறைவடையும்.
இதேவேளை, 2026 க.பொ.த உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
