தபால் திணைக்கள பணத்திற்கு என்ன நடந்தது?  நளிந்த ஜயதிஸ்ஸ காரசார பதில்!

இலங்கை தபால் திணைக்களம் மூலமாக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட சுமார் 6 இலட்சம் அமெரிக்க டொலர்கள் இணைய ஊடுருவிகளால் கொள்ளையடிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் நாடாளுமன்றில் குற்றம் சுமத்தினார்.


நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.


மேலும், இது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஊடுருவிகளா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுவதாகவும், காணாமல் போன இந்த நிதி குறித்து அரசாங்கம் தெளிவான பதிலை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த நிதி கையாடலை முதன்முதலில் அரசாங்கமே கண்டறிந்து வெளிப்படுத்தியதாகக் கூறினார்.


இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதோடு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும் (CID) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


அத்துடன் விசாரணை முடிவில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.

Post a Comment