திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு-மண்ணோடு மண்ணாக 100க்கு மேற்பட்டவர்கள் பலி

 

நூற்றுக்குமேற்பட்டோரை பலி எடுத்த தங்கச்சுரங்க விபத்து

மேற்கு மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

கனிவளம் மிக்க நாடான மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில், கேமரூன் எல்லையையொட்டியுள்ள ஒரு சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர்

மத்திய ஆப்பிரிக்க நகரமான பாபோவாவிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள ஜாம்போயே சுரங்கப் பகுதியில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த இந்த விபத்தைத் தொடர்ந்து, தேடுதல் பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.


Post a Comment