நீதிபதிகளின் ஓய்வு வயதை 67 ஆக உயர்த்தினால் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அதே வயது வேண்டும்

 உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை 67 ஆக உயர்த்த அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படுமாயின் அதேபோல் ஏனைய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதையும் உயர்த்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

அனைத்து அரசு மற்றும் அரை அரசு துறை ஊழியர்களின் ஓய்வு வயதையும் 67 ஆக உயர்த வேண்டும் என வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்வல்லுநர்களின் தேசிய பேரவை நேற்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

இந்த கோரிக்கை தொடர்பான யோசனையில் உலப்பனே சுமங்கல தேரர் சமன் ரத்னப்பிரிய ரவி குமுதேஷ் ஆனந்த பாலித உதேனி திசாநாயக சிந்தக்க பண்டார பந்துல சமன் குமார சுபுன் களுகோட்டகே கயாமல் சுமனரத்ன சுமேத சோமரத்ன மற்றும் சுபாஷ் கருணாரத்ன ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

நாட்டில் சுமார் 15 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ள நிலையில் ஒரு குறிப்பிட்ட சேவை பிரிவினருக்கு மட்டும் ஓய்வு வயதை உயர்த்துவது அரசியலமைப்பை மீறும் செயலாக அமையும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது தொடர்பில் தற்போது கடுமையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

Post a Comment