சனி பகவான் மற்ற கிரகங்களை விட மெதுவாக பயணிப்பவர். 2 1/2 வருடத்திற்கு ஒருமுறை ராசியையும் 5 முதல் 6 மாதத்திற்கு ஒருமுறை நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
அந்த வகையில் வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் திகதி சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்குள் நுழைய உள்ளார். அங்கு அக்டோபர் 09 ஆம் திகதி வரை இருப்பார்.
இந்த சனி நட்சத்திர பெயர்சியால் வாழ்வில் நல்ல மாற்றத்தை காணப்போகும் ராசிகள்
ரிஷபம்
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். எதிர்பாராத நல்ல செய்திகள் வரும். நிதி நிலைமை மேம்படும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் உண்டு.
மிதுனம்
பல வழிகளில் இருந்து நல்ல செய்திகள் வரும். புதிய வருமான வழிகள் உருவாகும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வரும். பணியிட பிரச்சனைகள் தீரும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவார்கள்.
கன்னி
மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆரோக்கிய பிரச்சனைகள் சரியாகும். அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றியாக முடியும்.
துலாம்
வாழ்கையில் பெரிய மாற்றம் ஏற்படும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வரும். நிதி முன்னேற்றத்திற்கான வழிகள் திறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப வாழ்கை இனிமையாக இருக்கும்.
