பதுளை லுணுகலையில் 16 வயது பாடசாலை மாணவன் கஞ்சாவுடன் கைது

 

பதுளை லுணுகலை பகுதியில் 5600 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளை தன்னிடம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 16 வயது பாடசாலை மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லுணுகலை 27 கட்டை அலகொலகம பகுதியை சேர்ந்த குறித்த மாணவன் அப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகின்றார்.

முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி பாக்கு தோட்ட பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த போது பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவரை மடக்கி சோதனை செய்தபோது கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

விசாரணைகளில் கைது செய்யப்பட்ட மாணவனின் தந்தை கஞ்சா விற்பனை தொடர்பில் ஏற்கனவே பல தடவைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான மாணவனை பசறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment