கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் நாளை பதினான்காம் திகதி நடைபெறவுள்ள பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் எந்த வகையிலும் வெளியாகவில்லை என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே மாணவர்கள் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் பரீட்சை திட்டமிட்டபடி வழமையாக நடைபெறும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை அம்பாந்தோட்டையில் உள்ள உயர்தர பரீட்சை ஒருங்கிணைப்பு மையமொன்றில் நாளை நடைபெறவிருந்த பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய ஆறு பொதிகள் இன்று நடைபெறவிருந்த இசை நடனம் மற்றும் விவசாய விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் பெட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
எனினும் குறித்த வினாத்தாள்கள் அடங்கிய பொதிகள் எதுவும் திறக்கப்படவில்லை என்றும் அவை பாதுகாப்பாக முத்திரையிடப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது உயர்தர பரீட்சைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் மாணவர்கள் நிம்மதியாக தமது பரீட்சைக்கு தயாராகுமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
