அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்றபோது தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசுக்கு சொந்தமான இந்த எரிசக்தி மற்றும் பெட்ரோலியக் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும், சூழ்நிலை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின்; அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான WAM-y இனால் வெளியிடப்பட்ட அறிக்கையில், மாலுமிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதும், கடல் வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் கடல் பாதுகாப்பையும் உறுதி செய்வதும் எவ்வளவு அவசியமானது என்பதனையும் அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்த மேலதிக விவரங்களை ADNOC நிறுவனம் வெளியிடவில்லை.
இதுவரை எந்த அமைப்பும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை எனவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
