527 பேர் கைது! நாடு முழுவதும் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

நேற்றைய தினம் (13) நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 527 நபர்கள் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த நடவடிக்கைகளின் போது மொத்தம் 26,882 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



 சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 26 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 126 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 மதுபோதையில் வாகனம் செலுத்திய 50 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஆபத்தான முறையில் மற்றும் அஜாக்கிரதையாக வாகனம் செலுத்திய 101 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,316 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்

Post a Comment