கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு சந்தேகநபர் அங்குணகொலபெலஸ்ஸ சிறைக்கு மாற்றம்

 

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பான சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி நேற்று இரவு வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு பெப்ரவரி 19ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்ற திறந்த நீதிமன்ற கூண்டுக்குள் வைத்து பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சதி செய்த குற்றச்சாட்டில் இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டார்.

இந்த கொலைக்கு பின்னர் நேபாளத்தில் தலைமறைவாக இருந்த அவரை விசேட பொலிஸ் குழு ஒன்று அங்கு சென்று கைது செய்து நாட்டிற்கு அழைத்து வந்தது.

அதன் பின்னர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் வைத்து விசாரணை செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

Post a Comment