அம்பாந்தோட்டை பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவரிடம் தனது தந்தை மற்றும் தாத்தா முறைகேடாக நடந்துள்ளதாக இரண்டு தனித்தனி முறைப்பாடுகள் பொலிஸில் பதிவாகியுள்ளன.
கடந்த 9ஆம் திகதி குறித்த சிறுமி காலி பகுதியில் நடந்த பாடசாலை விளையாட்டு போட்டிக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் மிரிஸ்ஸவில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு சென்றபோது தான் பட்ட துன்பங்களை பாட்டியிடமும் உறவினர் ஒருவரிடமும் கூறியுள்ளார்.
இதனையடுத்து பாட்டி சிறுமியை அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று முறைப்பாடு செய்துள்ளார். சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வாக்குமூலத்தில் சிறுமி கூறுகையில் சந்தேகநபர்களான தந்தை மற்றும் தாத்தா பல தடவைகள் தன்னிடம் முறைகேடாக நடந்ததாகவும் இது பற்றி யாரிடமும் சொல்ல கூடாது என அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரு சந்தேகநபர்களும் தற்போது தலைமறைவாக உள்ளதால் அவர்களை கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளை அம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
