நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: 2,94,089 மாணவர்கள் - 2,723 மத்திய நிலையங்கள்

 

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை 09.08.2026 ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2,723 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே இதனை அறிவித்தார்.

*மொத்த விண்ணப்பதாரர்கள்*: 2,94,089  

சிங்கள மொழி: 2,20,366 | தமிழ் மொழி: 73,723

*பரீட்சை நேரம்:*  

1. *இரண்டாம் வினாத்தாள்*: காலை 9.30 - 10.45  

2. *இடைவேளை*  

3. *முதலாம் வினாத்தாள்*: காலை 11.15 - 12.15

பரீட்சை தொடங்க 1 மணி நேரத்திற்கு முன் மாணவர்கள் வரவேண்டும். பெற்றோர்கள் பரீட்சை நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பரீட்சை முடியும் வரை புலமைப்பரிசில் தொடர்பான விளம்பரங்கள், மேலதிக வகுப்புகள் முற்றாக தடை. Mobile, Smart Watch உள்ளிட்ட எந்த இலத்திரனியல் சாதனமும் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.



Post a Comment