2026 A/L பரீட்சை ஆகஸ்ட் 10 முதல்: 3.72 லட்சம் மாணவர்கள் - 2,532 மத்திய நிலையங்களில் நடைபெறும்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05 வரை நாடளாவிய ரீதியில் 2,532 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே இதனை தெரிவித்தார்.

*மொத்த விண்ணப்பதாரர்கள்*: 3,72,310  

பாடசாலை விண்ணப்பதாரர்கள்: 2,64,496 | தனியார் விண்ணப்பதாரர்கள்: 1,07,814

அனுமதி அட்டைகள் பாடசாலை மாணவர்களுக்கு அதிபர்கள் மூலமும், தனியார் மாணவர்களுக்கு தபால் மூலமும் அனுப்பப்பட்டுள்ளன. தொலைந்தால் பரீட்சை திணைக்கள இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கலாம்.

*முக்கிய அறிவுறுத்தல்கள்:*

1.  பரீட்சை தொடங்க 1 மணி நேரத்திற்கு முன் மண்டபத்திற்கு வரவும்.

2.  அனுமதி அட்டையில் கையொப்பம் சான்றொப்பம் கட்டாயம்.

3.  அடையாளத்திற்கு தேசிய அடையாள அட்டை / சாரதி அனுமதிப்பத்திரம் / கடவுச்சீட்டு மட்டுமே.

4.  கையடக்க தொலைபேசி, ஸ்மார்ட் வாட்ச், புளூடூத் உள்ளிட்ட எந்த இலத்திரனியல் சாதனமும் தடை.

மோசடியில் ஈடுபட வேண்டாம் எனவும், அவசர அனர்தத்திற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் கூறினார்.



Post a Comment