சுக்கிரன் பெயர்சியால் மாளவ்ய ராஜயோகம் இந்த 4 ராசிகளுக்கு பணமழை கிடைக்கும்

ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இந்த ராசிக்குள் நுழைந்த அவர் செப்டம்பர் மாத தொடக்கத்தில் துலாம் ராசிக்கு செல்லவுள்ளார்

துலாம் ராசிக்கு சுக்கிரனே அதிபதி என்பதால் தனது சொந்த வீட்டிற்கு செல்லும் சுக்கிரனால் மிகவும் மங்களகரமான மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு நிதி நிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது

துலாம் ராசியின் முதல் வீட்டில் இந்த யோகம் உருவாவதால் தன்னம்பிக்கை மற்றும் ஆளுமை மேம்படும் பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம் வணிகத்தை விரிவாக்கும் திட்டங்கள் வெற்றி பெறும் நீண்ட நாட்களாக கைக்கு வராமல் இருந்த பணம் கிடைக்கும் வாய்பும் புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்பும் உள்ளது

மகர ராசியின் 10 ஆவது வீட்டில் யோகம் அமைவதால் தொழில் வாழ்கை சிறப்பாக இருக்கும் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கலாம் வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் வரும் எனவும் கூறப்படுகிறது

கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் அமையும் இந்த யோகத்தால் அதிர்ஷ்டம் முழுமையாக ஆதரிக்கும் வெளிநாட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபமும் முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும் போட்டி தேர்வுகள் எழுதுபவர்களுக்கு நல்ல செய்தி வரும் வணிகர்களுக்கு எதிர்பாராத லாபமும் பணிபுரிபவர்களுக்கு வருமான உயர்வும் கிடைக்கும்

கடக ராசியின் 4 ஆவது வீட்டில் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் பொன்னும் பொருளும் சேரும் புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் வாய்பு கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்சி அதிகரிக்கும் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பும் வணிகத்தில் நல்ல லாபமும் கிடைக்கும் நீண்ட நாட்களாக தாமதமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்



Post a Comment