மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை இன்று நாட்டின் பல மாவட்டங்களில் கவனத்திற்கொள்ள வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன்படி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை சுமார் 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அதிக வெப்பம் காரணமாக நீரிழப்பு, உடல் சோர்வு மற்றும் வெப்பத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரித்துள்ளனர்.
இதனால், பகல் நேரங்களில் மேற்கொள்ளப்படும் கடுமையான உடல் உழைப்பு நடவடிக்கைகளை முடிந்தவரை மட்டுப்படுத்துமாறும், போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் தேவையற்ற வெளிப்புறப் பயணங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நீண்ட நேரம் வெளிப்புறங்களில் பணியாற்றுபவர்கள் அதிக வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரத் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, குறித்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இன்றைய தினம் போதுமான அளவு தண்ணீர் அருந்தி, கடுமையான வெயிலைத் தவிர்த்து, அதிக வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
.jpg)