ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் விடைத்தாள் மதிப்பீடு ஓகஸ்ட் 20 முதல்

 

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பிடும் பணி எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மதிப்பீட்டு பணிகள் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் நிறைவடையும் எனவும் இதன் காரணமாக சுமார் ஒரு மாதத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே கூறியுள்ளார்.

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் 9ஆம் திகதி நடைபெற்றது. இதற்கு நாடு முழுவதிலும் மொத்தம் 294,089 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இதில் சிங்கள மொழி வழியில் 220,366 மாணவர்களும் தமிழ் மொழி வழியில் 73,723 மாணவர்களும் பரீட்சை எழுதியுள்ளனர்.

Post a Comment