நாளை முதல் மீண்டும் பறக்கிறது கட்டார் ஏர்வேஸ் – 3 முக்கிய நாடுகளுக்கு சேவை ஆரம்பம்

கட்டாரில் இயங்கும் 'கட்டார் ஏர்வேஸ்' (ஞயவயச யுசைறயலள) விமான நிறுவனம், தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தனது பிராந்திய சேவைகளின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, நாளை (8) முதல் மூன்று முக்கிய இடங்களுக்கு மீண்டும் விமான சேவையைத் ஆர்பிக்கவுள்ளது.

பஹ்ரைன் குவைத் மற்றும் இர்பில் ஆகிய மூன்று சேவைகளையே ஆரம்பிக்கவுள்ளது.

வளைகுடா மற்றும் பிராந்தியத்தின் முக்கிய நகரங்களுக்கான போக்குவரத்து தொடர்பை மீண்டும் ஏற்படுத்தி, வணிகம், சுற்றுலா மற்றும் மக்களின் பிரத்தியேக காரணங்களுக்காகப் பயணிப்போருக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்த சேவை ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், இந்தப் பிராந்தியங்களுக்கான சேவைகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன. 

பயணிகள் தங்களின் பயணத்தைத் திட்டமிடும் முன், அண்மைக்கால விமான அட்டவணை மற்றும் பயண வழிகாட்டுதல்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கட்டார்; ஏர்வேஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.


Post a Comment