இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில் இரண்டாவது நாளாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு ஏற்பட்ட பதற்றம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று காலை கைதிகளால் மீண்டும் அமைதியின்மை உருவாக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கு கைதிகளால் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
