ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்கையால் உருவாகும் ராஜயோகங்கள் மிகவும் சக்திவாய்ந்தவையாக கருதப்படுகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் உருவாகும் 'மகாலட்சுமி ராஜயோகம்' பொருளாதாரம், தொழில் மற்றும் வெற்றிக்கு வழிவகுக்கும் மிகவும் மங்களகரமான அமைப்பாகும்.
இந்த யோகத்தின் பலனை குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிகமாக பெறுவார்கள்.
*1. மிதுனம்*
மிதுன ராசியிலேயே இந்த யோகம் உருவாவதால் முழு பலனும் கிடைக்கும். தொழில் வளர்சி, வணிக முன்னேற்றம் ஏற்படும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். நீண்ட நாள் ஆசையான வாகனம் வாங்கும் யோகம் உண்டு. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
*2. கன்னி*
கன்னி ராசிக்கு புதிய வருமான வழிகள் உருவாகும். வேலையில் பதவி உயர்வு, மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நிலம், சொத்து, கட்டிடம் தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு பெரிய லாபம் கிடைக்கும். போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொன்னான காலம்.
*3. மகரம்*
மகர ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம் மற்றும் ஆரோக்கிய முன்னேற்றம் உண்டு. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரும். காதல் வாழ்கை சிறப்பாக அமையும். சிங்கிள்களுக்கு சரியான துணை கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் தீரும். பணியிடத்தில் பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும்.
