மனைவியின் கள்ளத்தொடர்புக்கு பழிவாங்கல்: ஜெய்பூர் வர்தகர் கைது

இந்தியாவின் ஜெய்பூரில் மனைவியின் கள்ளத்தொடர்பை காரணம் காட்டி கொடூரமாக தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த வர்தகர் ராஜேந்திர பிரசாத் சர்மா, தனது மனைவி கவிதா சர்மாவுக்கும் கார் சாரதி முகேஷ் யாதவுக்கும் இடையிலான தொடர்பை தொலைபேசி உரையாடல்கள் மூலம் அறிந்துகொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மனைவியை நீண்ட நேரம் உடல் ரீதியாக துன்புறுத்தியதில் கவிதா உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. பின்னர் இதை இயற்கை மரணம் போல் காட்ட ராஜேந்திர பிரசாத் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் பிரேத பரிசோதனையில் உடலில் பலத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ராஜேந்திர பிரசாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சாரதி முகேஷ் யாதவிடமும் விசாரணை நடக்கிறது.



Post a Comment