தம்புள்ளை மற்றும் காலியில் இரு விபத்துகள் இளைஞர்கள் 2 பேர் உயிரிழப்பு

தம்புள்ளை வெலிஹேன புலாகல வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

புலாகல நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாலத்தின் மதிலில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்தது

பலத்த காயமடைந்த ஓட்டுநர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இதேவேளை காலி உடுகம வீதியின் கல்கொடதெனிய சந்திக்கு அருகில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

காலி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பேருந்து நிறுத்தத்தில் மோதியது விபத்தில் ஓட்டுநரும் பின்னால் வந்தவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் சிகிச்சை பலனின்றி ஓட்டுநர் உயிரிழந்தார் உயிரிழந்தவர் உடுகம பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது

இந்த சம்பவம் தொடர்பில் அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்




Post a Comment