கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகர மையப்பகுதியில் நபர் ஒருவர் குண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்
பாதுகாப்பு காரணங்களுக்காக வணிக வளாகங்கள் ஹோட்டல்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் இருந்த மக்கள் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது
அசம்பாவிதங்களை தடுக்க முக்கிய சாலைகள் மூடப்பட்டு பேருந்து சேவைகள் மாற்று பாதைகளில் இயக்கப்பட்டன
இதையடுத்து கிளேட்டன் பூங்கா பகுதியில் வைத்து மிரட்டல் விடுத்த சந்தேகநபரை காவல்துறையினர் கைது செய்தனர்
முறையான சோதனைக்கு பின்னர் அப்பகுதியில் உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது இருப்பினும் காவல்துறையினரின் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது
