சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர காரியவசம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரைப் பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து ஒன்று தொடர்பாக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலமொன்றை வழங்கியதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்ததுடன், நீதிமன்ற விசாரணைகளைக் கருத்திற்கொண்டு சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
