தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவரைக் கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதுருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபரக்கட பகுதியில் வைத்து, ஜயவர்தனபுர விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் இன்று 10 இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 4, ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்தை பகுதியில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற சம்பவத்துடன் இவர் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ள இச்சந்தேகநபர், மேலதிக விசாரணைக்காக தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
