உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: சீரற்ற வானிலைக்கு அவசர இலக்கங்கள் அறிமுகம்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை*க்கு தோற்றும் பரீட்சார்த்திகள் *சீரற்ற வானிலையால்* பாதிப்புக்களை எதிர்நோக்கினால் உடனடியாக தெரிவிப்பதற்காக *அவசர தொலைபேசி இலக்கங்கள்* அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

*ஏன் இந்த ஏற்பாடு?*  

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பரீட்சைக்கு செல்வதில் தடைகள் ஏற்படும் பட்சத்தில், மாணவர்களுக்கு உடனடி உதவி வழங்கும் நோக்கில் *அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும், பரீட்சைகள் திணைக்களமும்* இணைந்து *விசேட கூட்டு வேலைத்திட்டம்* ஒன்றை செயற்படுத்தி வருகின்றன.

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஏற்படும் அனர்த தடைகளை விரைவாக நீக்குவதற்காக இந்த ஒருங்கிணைப்பு முறைமை பலப்படுத்தப்பட்டுள்ளது.

 *அவசர தொடர்பு இலக்கங்கள்*

*1. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்*  

   *அவசர இலக்கம்: 117*

*2. விசேட கூட்டு அவசர செயற்பாட்டு அறை*  

   `0113 668119`  

   `0113 668026`  

   `0113 668032`  

   `0113 668087`  

   `076 3 117 117`

*3. பரீட்சைகள் திணைக்களம்*  

   *அவசர இலக்கம்: 1911*

*அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவுறுத்தல்*  

வெள்ளம், மண்சரிவு அல்லது வேறு அனர்த்தங்கள் காரணமாக பரீட்சை மண்டபத்திற்கு செல்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்கள் மேற்கண்ட இலக்கங்களுக்கு *உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு* கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அவ்வாறு தொடர்பு கொள்ளும் மாணவர்களுக்கு தேவையான *உதவிகளும் ஒருங்கிணைப்புகளும்* உடனடியாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Post a Comment