இன்று தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு ஒரு பவுன் 2,000 ரூபாவால் உயர்வு

 

கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று நாட்டில் தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு சந்தை நிலவரப்படி இன்று காலை 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 350,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 382,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை ஏற்றம் காரணமாக இலங்கையிலும் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இன்று உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,398 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

Post a Comment