வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை நடந்த தொடருந்து விபத்தில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த தொடருந்து இன்று 17ஆம் திகதி காலை தாண்டிக்குளம் பகுதியில் சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் வவுனியா திருநாவற்குளத்தை சேர்ந்த பிரியந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு வயது 23.
தாண்டிக்குளம் புகையிரத பாதையை கடக்க முயன்றபோதோ அல்லது பாதையோரம் நின்றபோதோ இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் வவுனியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். இது கவனக்குறைவால் நடந்த விபத்தா அல்லது வேறு காரணமா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
