அஸ்வெசும ஓகஸ்ட் கொடுப்பனவு 19ஆம் திகதி வங்கிகளில் வைப்பு

ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவை எதிர்வரும் 19ஆம் திகதி பயனாளிகளின் வங்கி கணக்குகளில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

சபை வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் 999,502 பயனாளி குடும்பங்களுக்கு 9 பில்லியன் 241 மில்லியன் 892 ஆயிரத்து 500 ரூபா வழங்கப்படும்.

இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,955 பயனாளி குடும்பங்களுக்கு 2 பில்லியன் 321 மில்லியன் 735 ஆயிரம் ரூபா செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே தகுதியான பயனாளிகள் 19ஆம் திகதி முதல் தமது வங்கி கணக்குகளை சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Post a Comment