16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு

 



இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் விக்கெட் காப்பாளர்-துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்ல 3 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார்.

இவ்வணிக்கு தனஞ்சய டி சில்வா தலைமை தாங்குவதுடன், கமிந்து மெண்டிஸ் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

33 வயதான நிரோஷன் திக்வெல்ல இதுவரை 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 22 அரைசதங்கள் உட்பட 2,757 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் இடம்பெறாத கேஷர நுவந்த மற்றும் தில்ஷான் மதுஷங்க ஆகியோரும் இந்த டெஸ்ட் போட்டிக்காக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

16 பேர் கொண்ட முழு இலங்கை அணி:
• தனஞ்சய டி சில்வா (தலைவர்)
• கமிந்து மெண்டிஸ் (உப தலைவர்)
• நிரோஷன் திக்வெல்ல (விக்கெட் காப்பாளர்)
• லஹிரு உதார
• நிஷான் மதுஷ்க
• தினேஷ் சந்திமால்
• பசிந்து சூரியபண்டார
• சோனால் தினுஷ
• ரமேஷ் மெண்டிஸ்
• பிரபாத் ஜெயசூரிய
• மிலான் ரத்நாயக்க
• அசித பெர்னாண்டோ
• லஹிரு குமார
• விஷ்வ பெர்னாண்டோ
• கேஷர நுவந்த
• தில்ஷான் மதுஷங்க


Post a Comment