17 பேர் சடலமாக மீட்பு பலரை காணவில்லை

 




சிம்பாப்வேயில் உள்ள கரிபா ஏரியில் (Lake Kariba) செவ்வாய்க்கிழமை அன்று படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு மேலும் 27 பேரைக் காணவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


குறித்த படகில் 90 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் உட்பட மொத்தம் 95 பேர் மட்டுமே பயணிக்க முடியும்.

ஆனால், 12 குழந்தைகள் உட்பட சுமார் 120 பேர் அதில் பயணித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பலமான இராட்சத அலை தாக்கியதால் படகு நிலைதடுமாறி தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.

இதுவரை 77 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடற்படை, சுழியோடிகள் மற்றும் தனியார் ஹெலிகாப்டர்கள் ஆகியவை மூலம் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த நாட்டு ஜனாதிபதி Emmerson மனாங்கங்கவா நாட்டில் 'தேசிய பேரிடர் நிலையை' (State of disaster) பிரகடனம் செய்துள்ளார்.

சிவில் பாதுகாப்புப் படை (CPU) தகவல்படி, டிக்கெட் பதிவின் மூலம் 114 வாயோதிபர்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிக்கெட் தேவையில்லாத சிறிய குழந்தைகளும் இதில் பயணித்திருக்கக் கூடும் என்பதால் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சாம்பியா மற்றும் ஜிம்பாப்வே எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கரிபா ஏரி, உலகின் மிகப்பெரிய செயற்கை நீர்நிலைகளில் ஒன்றாகும்.

இது போக்குவரத்து, மீன்பிடித்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் தேவையான நீர்மின் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

Post a Comment