கொலம்பியாவில் 36 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
மேற்கு கொலம்பியாவை உலுக்கிய 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 36 மணி நேரமாக இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த 32 வயதுப் பெண் ஒருவரேஉயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இடிந்து விழுந்த கட்டிடத்தின் அடியிலிருந்து, 10 மணி நேர நீண்ட மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு டேனியலா லார்கோ என்ற பெண் மீட்கப்பட்டுள்ளார்.
அவர் இடிபாடுகளில் சிக்கியிருந்த நான்கு கொங்கிரீட் தூண்களுக்கு கீழே தீயணைப்பு வீரர்கள் தோண்டிய சுரங்கப்பாதை வழியாக இறுதியாக அவரை மீட்டுள்ளனர்.
