கொழும்பு – தெமட்டகொட பகுதியில் உள்ள 14 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன், அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில், மேலும் சில சிறுவர்களுடன் இணைந்து சுற்றுப்புறத்தை பார்த்துக்கொண்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போதே எதிர்பாராத விதமாக சிறுவன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
